பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் காதல் பறவைகளாக பறந்து திரிந்தவர்கள் தான் ஐஸ்வர்யாவும் ஷாரிக்கும். ஆரம்பத்தில் இவர்களின் காதலை மறுபடியும் ஒரு ஓவியா-ஆரவா? என அதிர்ச்சியுடன் கவனித்து வந்த பிக் பாஸ் ரசிகர்கள், பின்னர் சர்வாதிகாரி டாஸ்கின் போது ஐஸ்வர்யா செய்த அட்டூழியங்களை பார்த்த பிறகு கடுப்பாக தொடங்கிவிட்டனர். அதன் விளைவாக எலிமினேட் ஆகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஷாரிக்.

ஐஸ்வர்யாவும் அவருக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய அராஜகத்தை நிலைநாட்டி வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி கட்டத்திற்கு தற்போது வந்து நிற்கிறார் ஐஸ்வர்யா. இந்த முறை இவர் தான் டைட்டில் வின்னர் என மக்கள் நினைக்கும் அளவிற்கு பிக் பாஸும் ஐஸ்வர்யா விஷயத்தில் ஒரு தலை பட்சமாகவே இன்று வரை செயல்பட்டுவருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க நேற்றைய நிகழ்ச்சியின் போது பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் கெஸ்டாக வந்திருக்கிறார் ஷாரிக். அவரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, ஷாரிக்கை கட்டிப்பிடித்து வீட்டிற்குள் அழைத்து வந்தார். அதன் பிறகு அவரை பார்த்து வெட்கப்படுவது கன்னம் சிவப்பது என ஐஸ்வர்யா ஒரு பக்கம் அபிநயம் பிடித்து கொண்டிருந்தார். 

ஆனால் ஷாரிக் இதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றதும் ஒட்டு மொத்த நிகழ்ச்சியையும் பார்த்திருக்கிறார் ஷாரிக். அப்போது ஐஸ்வர்யா தன்னை குறித்து புறம் பேசியதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனை அவர் ஐஸ்வர்யாவிடமே நேரடியாக எதுக்காக என்னை பத்தி இப்படி பேசின? என மூஞ்சிலடித்தபடி கேள்வி கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டே நகர்ந்திருக்கிறார் ஷாரிக்.

ஷாரிக்கின் இந்த கேள்வியால் ஷாக்கான ஐஸ்வர்யா அதன் பிறகு கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். மேலும் கோலமாவு டாஸ்க் , பொம்மலாட்டம் டாஸ்க் போன்றவற்றில் நடந்து கொண்ட விதம் கேவலமாக இருந்தது என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஷாரிக். இதனால் கூடுதல் அப்செட் ஆகி இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு, மக்களும் அவர் மீது செம கடுப்பில் இருப்பது தெரிந்தால் அவ்வளவு தான் போல. இதை எல்லாம் ஆட்டம் போடும் முன்னாடி இல்ல யோசிச்சிருக்கனும்.