'பென்சில்' திரைப்படத்தின் மூலம் வில்லத்தனம் கலந்த பள்ளி மாணவனாக அறிமுகமானவர், வாரிசு நடிகர் ஷாரிக் ஹாசன். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகள் உமா மற்றும் ரியாஸ்கான் மகன் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இவர் இடம்பிடிப்பார் என எதிர்ப்பார்க்க பட்ட நிலையில். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யாவின் காதல் வலையில் சிக்கியுள்ளார் என்பது போல் தெரிகிறது. 

இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள, ஷாரிக்கின் அம்மா உமா, தன்னுடைய மகன் ஐஸ்வர்யாவை காதலிக்க வாய்ப்பே இல்லை என கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்.." இதுவரை ஷாரிக் ஐஸ்வர்யாவிடம், 'I like you' என்கிற வார்த்தையை தான் பயன்படுத்தியுள்ளார். நமக்கு ஒருவரை பிடிக்கிறது என்றால் இப்படி கூறுவது சாதாரணமான விஷயம் தான். இது வரை ஷாரிக் 'I love you' என்கிற வார்த்தையை கூறியதே இல்லை. அப்படி அவர் சொல்லி இருந்தால் தயவு செய்து அதனை வீடியோ எடுத்து எனக்கு அனுப்புமாறு கூறியுள்ளார்.

அதே போல் வெளியில் போய் மற்றதை பேசிக் கொள்ளலாம் என கூறுகிறார் ஷாரிக். அப்போது ஐஸ்வர்யா என்ன சொன்னார் என்பது காட்டப்படவில்லை என்றும், பிக்பாஸ் விளையாட்டிற்காக கூட இவர்  ஐஸ்வர்யாவுடன் நெருங்கி பழகுகிறாரா என்பது இவர் வெளியே வந்தால் தான் தெரியும் என கூறியுள்ளார். 

மேலும் தன்னுடைய மகன் கண்டிப்பாக பிக்பாஸ் இறுதி சுற்றுக்கு வருவார் என உமா நம்பிக்கையோடு கூறியுள்ளார். வரும் வாரங்களில் என்ன நடக்கும், அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா ஷாரிக் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.