சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட படுக்கையறையில் ஷாலு ஷம்மு நடத்தி ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. பட வாய்ப்பிற்காக நாளுக்கு நாள் ஆள் மாறிவரும் ஷாலு ஷம்மு, பிக்பாஸ் மீராமிதுனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாறியுள்ளார். அரைகுறை ஆடையில் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி குத்தாட்டம், ஹாட் போட்டோ ஷூட் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பட வாய்ப்பிற்காக ஷாலு ஷம்மு செய்யும் வேலைகள் நெட்டிசன்களை செம கடுப்பாக்கியுள்ளது. 

 

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அழகான பாவடை, தாவணியில் ஷாலு ஷம்மு போட்டுள்ள கவர்ச்சி ஆட்டம் நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது.  இது எல்லாம் டான்ஸா, டான்ஸ்ங்குற பேருல ஏன் இப்படி பண்றீங்க போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான பாவடை, தாவணியில் ஷாலு ஷம்மு போட்ட கெட்ட ஆட்டத்தால் நொந்து போன பலர், படுமோசமான கமெண்ட்களையும் பதிவிட்டுள்ளனர். இதையெல்லாம் பெரிதாக என்னாத ஷாலு ஷம்மு, பாசிட்டிவ், நெகட்டிவ் என இருவகையான கமெண்ட்களையும் வரவேற்கிறேன் என நக்கலாக பதிவிட்டுள்ளார்.