தற்பொழுது தென்னிந்திய திரைப்பட துறையில் மிகவும் பிசியாக வலம்வந்தது கொண்டிருப்பவர் நடிகர் விஜய் தேவாரகொண்டா. இவருடைய நடிப்பில், தமிழ், தெலுங்கு என வரிசையாக பல படங்கள் வெளிவரவுள்ளது. 

சென்ற வருடம் இவருடைய நடிப்பில் வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் வணிகரீதியாக  மிகப்பெரும் வெற்றியை பெற்றதோடு ஒட்டுமொத்த இந்திய திரைப்பட துறையின் கண்களையும் இப்படத்தின் மீது விழ வைத்தது. 

இப்படத்திற்கு பிறகு தான் இவருடைய மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிக்க, இயக்குனர் பாலா இயக்கிவருகிறார். இப்படத்திற்கு வர்மா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்கவுள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பினை பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.