'ஓ போடு' ராணி ஆண்டிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விருமாண்டி!
தொலைகாட்சித் தொடர் நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நடிகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளது தமிழ் சினிமாவில் பேசும் பரபரப்பாகியுள்ளது.
விருமாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சண்முகராஜன். அந்த படத்தில் பேய்க்காமன் கேரக்டரில்
அறிமுகமான இவர், ரஜினி நடித்த சிவாஜி உள்பட 85 படங்களுக்குமேல் நடித்து விட்டார். பல்வேறு படங்களில் துணை
கதாப்பாத்திரங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார். தற்போது சண்முகராஜன், டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும், நந்தினி தொடரில் நடித்து வருகிறார்.
இவருடன் நடிகை ராணியும் நடித்து வருகிறார். நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்து சரத்குமார் குடும்பத்தை சீர்குலைக்கும் பாத்திரத்தில் நடித்தவர்தான் ராணி. விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் வரும் 'ஓ போடு...' பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தவர். தற்போது சினிமா சான்ஸ் இன்றி டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சண்முகராஜன் நடித்து வரும் நந்தினி தொடரில் ராணியும் நடித்து வருகிறார். நந்தினி தொடரின் படப்பிடிப்பு சென்னை செங்குன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய படப்பிடிப்பில் ராணி, சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சண்முகராஜன் மீது, நடிகை ராணி செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். அதில், சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக போலீசில் கூறியுள்ளார்.
#Metoo ஹாஷ்டாக் மூலம் திரையுலகின் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைக்கு, நடிகர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'ஓ போடு...' ராணி தனது புகாரில் இலவச இணைப்பாக இருக்கட்டுமே என்று முன்னாள் இயக்குநரும், நடிகருமான ராஜ்கபூர் பெயரையும் சேர்த்து போலீசில் புகார் அளித்துள்ளார்.