தெலுங்கு பட உலகில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இளம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி தென்னிந்திய தமிழ் சினிமாவையே பரபரப்பில் ஆழ்த்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. 

பட்டியல் போட்ட நடிகை:

தன்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெயரை ஸ்ரீலீக்ஸ் என்கிற முகநூல் பக்கத்தில் பட்டியல் போட்டு வெளியிட்டு தெலுங்கு திரையுலகையே அதிரவைத்தார். 

தடை:

இவரின் இந்த நடவடிக்கையால் தெலுங்கு நடிகர் சங்கம் இவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதித்தது. பின் மகளிர் ஆணையம், பாலியல் புகாரை விசாரிக்க தொடங்கியதும் ஸ்ரீரெட்டிக்கு எதிரான தடையை நீக்கி படங்களில் அவர் தொடர்ந்து நடிக்கலாம் என்று அறிவித்தனர். 

பட வாய்ப்புகள் இல்லை:

இந்நிலையில் தற்போது ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்புகள் இல்லை. செக்ஸ் புகாருக்கு பிறகு இவரை இயக்குனர்கள் ஒதுக்குவதாக கூறப்பாட்கிறது. 

இவர் பெரிய தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதால், மற்ற பட அதிபர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்யை ஒப்பந்தம் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது.

சோகத்தில் ஸ்ரீரெட்டி:

இதனால் கடந்த சில மாதங்களாக நடிகை ஸ்ரீரெட்டிக்கு வருமானம் இல்லை. அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கான பொருட்கள் வாங்க கூட செலவிற்கு பணம் இல்லாமல் ஸ்ரீரெட்டி கஷ்டப்பட்டு வருகிறாராம்.

இந்த நிலைக்கு நன்றி:

இந்நிலையில் சமூக வலைதளத்தில் இதுகுறித்து பகிர்ந்துக்கொண்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி  'நான் செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். சினிமாவில் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தெலுங்கு பட உலகிற்கு நன்றி என கூறியுள்ளார்.