செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் நடிகர்களை அம்பலப்படுத்த நடிகைகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வந்தால் அவர்களின் பெயர்களை வெளியிட தயாராக இருப்பதாக நடிககை இலியானா தெரிவித்துள்ளார்

நண்பன், கேடி படங்களில் நடித்த இலியானா தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட்டுக்கு பறந்தார்.

மீண்டும் அவர் தென்னிந்திய படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. இந்தியில் தற்போது அஜய் தேவ்கனுடன் நடித்திருக்கும் புதிய படம் வெளியாக உள்ளது. அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இலியானா பரபரப்பான கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

தென்னிந்திய படங்களில் என்னை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். நடிப்பை வெளிப்படுத்துவதற்கான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் இதில் கடுப்பாகி இந்தி படங்களில் நடிக்க வந்தேன் என குறிப்பிட்டார்.

அங்கு நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்கள் கிடைத்திருக்கிறது. அதேசமயம் மற்றொரு பயம் எனக்குள் இருக்கிறது. பாலிவுட்டில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச் பெயரில் படுக்கைக்கு அழைக்கும் நிகழ்வுகள் நடக்கிறது. சில நடிகர்கள் இதை செய்கிறார்கள் என இலியானா கூறினார்.

அவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். அதுபற்றி வெளியே சொன்னால் இங்கு எனக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைக்காது. இதுநாள் வரை சம்பாதித்ததை இழக்கும் அளவுக்கு என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என இலியானா குறிப்பிட்டார்..

ஹாலிவுட்டில் செக்ஸ் டார்ச்சர் தருபவர்களை அம்பலப்படுத்த பல நடிகைகள் ஒன்றாக திரண்டு குரல் கொடுத்தார்கள். அதுபோல் இங்குள்ள நடிகைகள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க முன்வந்தால் செக்ஸ் டார்ச்சர் தருபவர்களின் பெயர்களை வெளியிட நான் தயார் என்றும்  இலியானா கூறினார்