தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் மலேஷியாவைச் சேர்ந்த  முகேன்  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்நிலையில், இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை. அந்த நிகழ்ச்சியில், அண்மையில்  ஒளிபரப்பான எபிசோட் ஒன்றில், மஹிரா சர்மா மற்றும் அசிம் ரியாஸ் ஆகிய இருவரும் ஜோடியாய் கட்டிலில் கட்டிப்பிடித்தபடி படுத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஒவ்வொரு டாஸ்க் தரப்படுவது வழக்கம். இதன்படி, Bed Friend Forever என்ற தலைப்பில் தரப்பட்ட டாஸ்கில், மஹிராவும், அசிம் ரியாஸூம் படுக்கையில் கொஞ்சியபடி பங்கேற்றுள்ளனர். 

ஆனால், இந்த விவகாரத்திற்கு, சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்து  வருகிறது. பிராமண பெண்ணான மஹிராவை, முஸ்லீம் ஆண் அசிம் ரியாஸ் எப்படி தொடலாம் எனக் கேட்டு, சமூக ஊடகங்களில் பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
.
இந்த விவகாரம் குறித்து தற்போது  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சமூக ஊடகங்களில் பரவி வரும் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர்கள், அசிம் ரியாஸ் மற்றும் மஹிரா, அல்ல என்றும் அவர்கள் 2 பேரும் பிக் பாஸ் 9 சீசனில் பங்கேற்ற சுயாஷ் ராய் மற்றும் கிஸ்வார் மெர்ச்சண்ட் ஆகியோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இது போன்ற பாலியல் காட்சிகளை ஒளிபரப்பியது தவறு என்றும், உடனடியாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.