செக்ஸ் உறவுக்கு மறுத்த காரணத்தால், பல மாதங்கள் வாய்ப்பின்றி வாடியதாக இளம் நடிகை ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த புகாரை கூறியிருப்பவர் இந்தி நடிகை அதிதி ராவ் ஹைதாரி (31). கடந்த 2006ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாளபடத்தின் மூலமாக, சினிமா உலகில் அறிமுகமான அதிதி ராவ், யே சாலி ஜின்டாகி, பத்மாவத், பூமி, காற்று வெளியிடை போன்றபடங்களில் நடித்து பிரபலமானார்.
 
சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்த இவர், கடந்த பல மாதங்களாக புதிய பட வாய்ப்புகள் இன்றி காணப்பட்டார்.தற்போது மணிரத்னம் இயக்கத்தில், செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், தனக்கு படவாய்ப்புகள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி அதிதி ராவ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திடீரென பட வாய்ப்புகள் இன்றி நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளைஎன்னால் மறக்க முடியவில்லை. பட வாய்ப்புக்காக சிலர் என்னிடம் பேசிய வார்த்தைகளும், நடந்துகொண்ட முறையும் கடும்அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. செக்ஸ் உறவுக்கு ஒத்துழைத்தால்தான் பட வாய்ப்பு தரப்படும் எனச் சிலர் தெரிவித்தனர். ஒருபெண்ணிடம் இப்படி பேசும் தைரியம் இவர்களுக்கு எப்படி வருகிறது என்று நினைத்து நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்.கடந்த 8 மாதங்களாக இதில் இருந்து மீண்டு வர கடுமையாகப் போராடினேன்.
 
புதிய வாய்ப்புகள் கிடைப்பதும் திடீரென நின்று போனது. இதற்கு யார் காரணம் என அவர்களுக்கே தெரியும். ஆனால், நான்செய்யும் தொழில் மீது எனக்கு இப்போதுதான் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. நடிப்பில் இருந்து என்னை யாரும் பிரிக்க முடியாது.உண்மையான திறமைக்கு வாய்ப்புகள் எப்போதும் கிடைக்கும். அப்படித்தான் சில புதிய படங்களில் எனக்கு வாய்ப்புகிடைத்துள்ளது,’’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘’சினிமாத்துறையை ஆதிக்கம் செலுத்தும் ரவுடி தொழில் போல சிலர் நடத்துகிறார்கள்.அவர்களுக்குப் பலர் ஆதரவு காட்டுவது மிகத் தவறானது. இதனால் என்னைப் போன்ற பல அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.என் திறமையை நம்புகிறேன். எனவே, எனக்கு செக்ஸ் உறவை வைத்து வாய்ப்பு தேடும் அவசியம் இல்லை,’’ என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். அதிதி ராவின் இந்த புகார், பாலிவுட் சினிமா வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.