சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த, 'மெட்டி ஒலி' சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிகா.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த, 'மெட்டி ஒலி' சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிகா. இதைத்தொடர்ந்து முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம், மாமியார் தேவை, உயிர், என பல சீரியல்களில் முன்னணி நாயகியாகவும் இரண்டாவது நாயகியாகவும் நடித்தார்.

தற்போது கல்யாணப்பரிசு, அழகு, ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையில், கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின் வெண்ணிலா கபடி குழு, நடிகர் தனுஷுடன் 'வேங்கை' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 33 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த ஸ்ரீதிகா தற்போது ஒருவழியாக திருமணம் செய்துகொண்டு செய்துகொண்டுள்ளார்.

இவருடைய திருமணம் டிசம்பர் 30-ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஸ்ரீதிகா தன்னுடைய ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதில் கடையில் என் திருமணம் முடிந்துவிட்டது. டிசம்பர் 30ஆம் தேதி 2019 ஆம் வருடம் முடிந்துவிட்டது. இனி மிஸ்ஸஸ் ஸ்ரீதிகா சைனீஸ் என தெரிவித்துள்ளார். இவருடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. எனினும் இவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.
