விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் நாட்டுப்புற பாடகர், 'செந்தில் கணேஷ்'. 

கணவன் மனைவியாக இவரும், இவருடைய மனைவி ராஜலட்சுமியும் நாட்டுபுற பாடல்கள் பாடி, தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். தற்போது இருவரும், வெளிநாடு மேடை நிகழ்ச்சி, பின்னணி பாடல் பாடுவது என மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்.

இதுவரை ஒரு சிறந்த பாடகராக மட்டுமே அனைவராலும் அறியப்பட்ட இவர் தற்போது கதாநாயகனாகவும், திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். 

இந்த படத்தில் செந்தில் கணேஷ் ஒரு கிராமத்து இளைஞராக நடிக்கிறார். கரிமுகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காயத்திரி ஐயர் நடிக்கிறார். இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர். இந்த படத்தை செல்ல தங்கையா என்பவர் இயக்குகிறார்.

தற்போது இந்த படத்தின் போஸ்ட்டரை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செந்தில் கணேஷ். இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் செந்தில் கணேஷ் ஒரு பாடலையும் பாடி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் இதோ: