பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனின் பரணியாக வருவார் என மக்கள் நினைத்த சென்றாயன், பரணியாக இல்லாமல் சென்றாயனாகவே தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். என்ன தான் நடிப்பு சாயம் பூசிக்கொண்டாலும் யதார்த்தத்தை கட்டுப்படுத்த தெரியாத ஒரு கிராமத்து பேச்சை சென்றாயனிடம் அதிகம் காணலாம். 

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நபராக சக போட்டியாளர்கள் இவரை கருதி, அதை மாற்றி கொள்ளும் படி இவருக்கு அறிவுறை கூறிய போதும் கூட, தனக்கு என்ன வருமோ அதை மட்டுமே எப்போதும் கடைபிடிக்கும் நபர் இவர். மொத்தத்தில் வெகுளி என்று மக்களாலும், வெகுளி மாதிரி இருக்கும் உஷார் பக்கிரி என சக போட்டியாளர்களாலும் கணிக்கப்பட்டிருக்கும் சென்றாயன், மிகவும் ஏழ்மையான பின்னணியை கொண்டவர். 

இந்த சினிமாத்துறையில் தன் முகத்தை பதித்திட அவர் பட்ட பாடு என்ன என்பதை முன்னரே பலமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார் சென்றாயன்.
 இவர் தன்னுடைய முதல் சம்பளத்தில் என்ன செய்தார் என்று சமீபத்தில் கூறி இருக்கிறார். கஷ்டப்பட்டு தான் சம்பாதித்த பணத்தில் தனது அம்மாவிற்கு கம்மல் வாங்கி கொடுத்தாராம்.

பொதுவாகவே அம்மாக்களுக்கு மகன் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட அளவு கடந்த சந்தோஷத்தை தரும். சென்றாயனின் அம்மாவுக்கு அப்படி தான். அந்த சந்தோஷத்தில் தன் அம்மா. எல்லோரிடமும் மகன் தனக்கு வாங்கி தந்த கம்மலை காட்டி பெருமை பட்டிருக்கிறார். இந்த நிகழ்வை தன்னால் எப்போதும் மறக்க முடியாது என , சந்தோஷமாக நினைவுகூர்ந்திருக்கிறார் சென்றாயன். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே இவரை எவிக்ஷனில் இருந்து மக்கள் பல முறை காப்பாற்றி இருக்கின்றனர். இதனால் இம்முறையும் இவர் மக்களால் காப்பாற்றப்படுவாரா? என்பது இனிதான் தெரியும்.