பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் வெகுளித்தனமான போட்டியாளர் என்று சக போட்டியாளர்களிடம் பெயர் வாங்கி இருப்பவர் நடிகர் சென்றாயன். பெரும்பாலும் இவர் செய்யும் வேலைகள் எல்லாம் பிறருக்கு சிரிப்பை வரவழைப்பதாக தான் இருக்கும். ஒரு கிராமத்து வெகுளித்தனத்தை இவர் பேச்சிலும் நடவடிக்கையுலும் எப்போதும் காணலாம்.

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பிரமோ இவருக்கானதாக அமைந்திருக்கிறது. இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்றாயனின் மனைவி அவரை காண பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு சென்றாயன அதிகம் மிஸ் செய்தது அவர் மனைவியை தான் என அவரே பலமுரை கூறி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் வைத்து சென்றாயனை பார்த்த அவரது மனைவி அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த சென்றாயனிடம் ”நீ அப்பாவாகிட்ட” என அவரின் மனைவி கூறிய அடுத்த நொடி மகிழ்ச்சியின் உச்சத்தில் சென்றாயன் துள்ளுகிறார். அழுகை , மகிழ்ச்சி என கலவையான உணர்ச்சியில் அவர் “ நான் அப்பாவாகிட்டேண்டா” என கத்தி கூச்சலிடுவது பார்ப்பவர்களை நெகிழச்செய்கிறது.  

யதார்த்தம் என்ற பெயரி உணர்வுகளை வெளிகாட்டி கொள்ளாமல் கட்டுப்படுத்தி கொள்ளும் நாகரீகங்கள் தெரியாததாலோ என்னவோ, சென்றாயனின் இந்த மகிழ்ச்சி பார்ப்போரை நெகிழச்செய்கிறது. திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த குழந்தையை நினைத்து அந்த தம்பதியர் அடைந்திருக்கும் பூரிப்பு நெகிழ்ச்சியுற செய்கிறது. 

பல ஆண்டு காத்திருப்புக்கான பலன் இது என இந்த பிரமோவில் கூறி மகிழ்கிறார் சென்றாயன். இந்த மகிழ்ச்சியை பிக் பாஸ் வீடே கொண்டாடி இருக்கிறது இன்றைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு.