பிக்பாஸ் முதல் சீசனில்,  போட்டியாளர்கள் எப்படி பட்டவர்கள் என்று, ஒரு வாரத்திலேயே கணிக்க முடிந்த ரசிகர்களால், இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு விளையாடி வருபவர்களை ஒரு மாதம் ஆகியும் கணிக்க முடியவில்லை.

 

இதற்கு முக்கிய காரணம், அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என தங்களுடைய கோபத்தை கூட வெளியே காட்டிக்கொள்ளாமல் விளையாடி வருவது தான்.

சில சமயங்களில் இவர்களுடைய உண்மை முகம் வெளியே வந்தாலும், இது குறித்து கேள்வி எழும்போது  சுய ரூபத்தை வெளியே காட்டாமல் மீண்டும் நடிக்க துவங்கி விடுகிறார்கள். உதரணமாக ஆர்.ஜே வைஷ்ணவி ஒருவரை பற்றி மற்றொருவரிடம் புறம் பேசிக்கொண்டிருந்தார். இது குறித்து நேரடியாக கமல் கேள்வி எழுப்பியதும், தற்போது யாரை பற்றியும் பேசாமல் இருக்கிறார். இது போன்ற செயல்கள் அவர்கள் தன்னகளை நல்லவர்கள் என காட்டிக்கொள்வது போல் இருந்தாலும், மக்களுக்கு அவர்கள் நடிப்பதாகவே தோன்றுவதாக கூறிகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், சென்ராயன் 'பிக்பாஸ்க்கு உண்மையில் மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும், இந்த காலத்தில் கடிதம் என்பதை அனைவரும் மறந்து விட்டதாக கூறுகிறார்'. இதைதொடர்ந்து பேசும் ரித்விக்கா 'கை தட்டியவாறு, தனக்கு படிக்கவே தெரியாது என கூறிவிட்டு இவ்வளவு பெரிய கடிதத்தை எழுதியுள்ளார் சென்ராயன் என விமர்சித்து பேசுகிறார்'.

இதைதொடர்ந்து ரம்யா பேசும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் சிலர் நடிப்பதாக கூறுகிறார்கள். மற்றவர்கள் அப்பாவி மாதிரி காட்டிக்கொள்வதாக நினைக்கிறார்கள். உண்மையில் அப்பாவியாக இருந்தால் அது நல்லது. இல்லையென்றால் நம் உண்மை முகத்தை காட்டிவிட வேண்டும் என அறிவுரை  கூறுகிறார். 

இதனால் அப்பாவி போன்று இத்தனை நாட்கள், சென்ராயன் நடிக்கிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.