தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரில் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள் மூலமாக கிடைத்த தகவலின்படி இந்த வாரம் சென்ராயன் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் சென்ராயன், ஐஸ்வர்யாவிற்காக தனது முடியை கலர் செய்து கொண்டு அவரை அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து காப்பாற்றினார்.

அத்தோடு ஐஸ்வர்யா தன்னை ஏமாற்றி டாஸ்க்கை செய்ய வைத்தார் என்று தெரிந்தும் கூட ஐஸ்வர்யாவிடம் தாமாகவே சென்று உனக்காக நான் செய்துகொள்கிறேன் என்று பேசியது மட்டும் தான் சென்ராயன் செய்த தவறு.

ஆனால், அதை தவிர சென்ராயன் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் ஒழுங்காக தான் நடந்து வந்தார். ஒரு வேலை இந்த முறையும் பிக் பாஸ் தனது வேலையை காண்பித்து ஐஸ்வர்யாவை காப்பற்றிவீட்டாரா என்ற எண்ணம் தோன்றுகிறது என்கின்றனர் பார்வையாளர்கள்.

ஒரு வேலை ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேறாமல் இருந்தால் அவர் அடுத்த வாரமும் நாமினேஷனில் வர மாட்டார். ஏனெனில் இந்த வாரம் நடந்த போன் டாஸ்கில் ஐஸ்வர்யா அடுத்த வாரம் நேரடியாக நாமினேஷனில் இருந்து தப்பிக்க சென்ராயன், ஐஸ்வர்யாவிற்காக டாஸ்க் செய்து அவரை அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விட்டுக் கொடுப்பதாக நினைத்து சென்ராயன் ஏமாந்துவிட்டார் என்றே கூற வேண்டும். எது எப்படியோ சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா தப்பித்துக் கொண்டார்.