செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் “என்.ஜி.கே”. சூர்யா, சாய்பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனால் மிகப்பெரிய ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் இயக்குநர் செல்வராகவன். அதனால் நீண்ட நாட்களாக கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 

இதையும் படிங்க: தர்பாரையே தட்டித்தூக்கிய "திரெளபதி"... ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?

இதையடுத்து செல்வராகன் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஒரு பக்கம் தம்பி தனுஷ் உடன் செல்வராகவன் மீண்டும் இணைய உள்ளார், அவருக்காக கதை எழுதி வருகிறார் என்றும், சிலரோ அந்த படம் “இரண்டாம் உலகம்” படத்தின் இரண்டாம் பாகம் அல்லது “புதுப்பேட்டை” படத்தின் 2ம் பாகமாக இருக்கும் என்று கூறிவந்தனர். ஏனென்றால் “இரண்டாம் உலகம்” படத்தில் ஆர்யாவுக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது தனுஷ் தான். 

இதையும் படிங்க: "நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி...!

இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது அடுத்த படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருப்பதாகவும், கிட்டதட்ட பைனல் கட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் செல்வராகவனே அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அந்த படம் கண்டிப்பாக “புதுப்பேட்டை 2” தான் என்றும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வந்தனர்.

இதையும் படிங்க: ரஜினியை விடாமல் துரத்தும் பெரியார்... நாளை மறுநாள் வருகிறது தீர்ப்பு... வழக்குப்பதிய உத்தரவிடப்படுமா...?

இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் செல்வராகவன், என்.ஜி.கே. படத்துக்கு அப்புறம் என்ன படம் பண்ணப்போறீங்கன்னு என்ன நிறைய பேர் கேட்குறாங்க. என்னோட அடுத்த படம் தனுஷ் கூட. “புதுப்பேட்டை 2” பண்ணப்போறேன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் ஆராவாரத்திற்கிடையே செல்வராகவன் வெளியிட்ட இந்த தூள் அறிவிப்பு வீடியோ சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.