இயக்குனர் பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சீமராஜா'. இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

தற்போது 'சீமராஜா' படத்தை போலந்து நாட்டில் வெளியிட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதற்க்கு முன் போலந்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி - அஜித் ஆகியோர் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தற்போது முதல் முறையாக் சிவகார்த்திகேயன் படமும் வெளியாகவுள்ளது.

ஆனால் இதுவரை போலந்தில் உள்ள எந்த திரையரங்கில் 'சீமராஜா' வெளியாக உள்ளது என்கிற தகவல் வெளியாகவில்லை. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். இதுவரை போலந்து நாட்டில், நடிகர் விஜயின் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.