இன்டர்நெட்டை கில்லியாக தெறிக்கவிடும் சாயிஷாவின் தாறுமாரு டான்ஸ்... Video

சாயிஷா வெளியிட்டுள்ள நடன வீடியோவொன்று இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

First Published Nov 24, 2018, 4:33 PM IST | Last Updated Nov 24, 2018, 4:33 PM IST

காடு, கரை, கண்மாய் என ஏதேதோ பின்னணியிலிருந்தெல்லாம் கவர் வீடியோக்களாக தங்களது நடனத்தைப் படம்பிடித்து டிக் டாக், லஸ்ஸோ போன்றவற்றில் ஒருபக்கம் அப்லோடு செய்து வருகின்றனர் இணையவாசிகள். இப்படியாக சினிமா நடிகர், நடிகைகளின் பாடல்களை மீட்டுருவாக்கம் செய்து இவர்கள் வெளியிட்டுக்கொண்டிருக்க, மற்றொரு புறமோ ரியல் நடிகைகளே தங்களின் நடனங்களை ட்விட்டர், இன்ஸ்டகிராம் போன்றவற்றில் பதிவிட்டு கவனம் ஈர்த்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை அதுல்யா ரவிகூட, சர்கார் படத்திலிருந்து ‘ஓஎம்ஜி பொண்ணு’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை சாயிஷாவும் தற்போது தனது நடன வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திப்பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்க அதற்கேற்றவாறு மிகவும் ஸ்டைலிஸாகவும், எனர்ஜிடிக்காகவும் நடனம் ஆடியுள்ளார் சாயிஷா. “நடனத்தின் மேலான காதலுக்காக” எனத் தலைப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சாயிஷா, அவரது நடன பயிற்சியாளரான ஸ்வைன் விக்ரம்மையும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சாயிஷா நளினமாகவும் நேர்த்தியாகவும் நடனமாடியுள்ளமை முதல் முறை பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சர்யத்தை அளிக்கலாம். சினிமாவில் அவரது நடனத்தைக் கண்டவர்களுக்கு என்னவோ இது வெறும் ட்ரெய்லர்தான். காரணம், தற்போது நடனத்தில் கில்லியாக வலம்வரும் மிகச் சில தமிழ் கதாநாயகிகளில் முன்னணி இடத்தில் உள்ளார் சாயிஷா.