'பிச்சைக்காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்த சாட்னா டைட்டஸ் திருமணத்திற்குப் பின்,  தற்போது மீண்டும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  

இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தில் அறிமுகமான சாட்னாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கலையரசன் நடித்த 'எய்தவன்' மற்றும் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' ஆகிய படங்களில் நடித்தார்.

பின் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு சில காலம் விலகி இருந்த சாட்னா, தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாக இருக்கும், 'பிக் பிரதர்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  இந்த படத்தை 'பிரெண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா',  ஆகிய படங்களை இயக்கிய சித்திக் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.