சென்னையில் உள்ள திரையரங்கங்களில் மிகவும் பிரபலமானது சத்தியம் சினிமாஸ். திரைப்படங்கள் மட்டும் இன்றி, இங்கு பல படங்களின் இசை வெளியீட்டு விழா, மேடை நாடகங்கள் போன்ற நிகழ்சிகளும் நடந்து கொண்டே தான் இருக்கும்.இதனால் எப்போதுமே சத்தியம் திரையரங்கம் பரபரப்பாகவே காணப்படும். 

மேலும் இங்கு வரும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை விரும்பி ருசிப்பது என்றால், இங்கு விற்கப்படும் பாப் கான் எனலாம். பல இடங்களில் பாப் கான் வாங்கி சுவைத்திருந்தாலும், இங்கு விற்பனையாகும் பாப் கானுக்கு தனி ருசி என்றே கூறலாம்.

தற்போது இந்த பாப் கான் ரகசியத்தை சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டுள்ளது சத்தியம் சினிமாஸ் நிறுவனம். இது குறித்து வெளியிடப்பட்டது என்னவென்றால்... "இந்த திரையரங்கில் விற்பனையாகும் பாப்கார்ன் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா ஆற்றங்கரையில் விளைவதாகவும், அங்கிருந்து நேரடியாக கொண்டு வரபடுவதாகவும், இந்த பாப்கார்னை சென்னை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து 20 வருடங்கள் ஆகிவிட்டதாக சத்தியம் சினிமாஸ் தெரிவித்துள்ளது.