தளபதி விஜய்யின் 64வது படமான "மாஸ்டர்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மருத்துவ படிப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், விஜய் பேராசிரியராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அரை மார்க்கால் கை நழுவிய டாக்டர் சீட்... ஆதரவற்ற பெண்ணின் கனவை நனவாக்கிய நடிகர் சூர்யா...!

டெல்லி, கர்நாடகாவில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறன. விஜய், விஜய் சேதுபதி மோதும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூகிக்க முடியாத அளவிற்கு படத்தின் கதை இருக்கும் நிலையில், படத்தின் வியாபாரம் படு ஸ்பீடாக முடிந்துவிட்டது. இந்த படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரை "மாஸ்டர்" படத்துடன் எந்த படமும் போட்டிக்கு இல்லை என்ற நிலை இருந்து வந்த சமயத்தில், விஜய்க்கு போட்டியாக சசிக்குமார் களம் இறங்கியுள்ளார். ஏற்கனவே சசிக்குமாரை வைத்து 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்ட்டியன் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜல்லிக்கட்டு கதை என்பதால் பொங்கல் அன்று படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ''தர்பார்'' திரைப்படம் உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் தியேட்டர் பிரச்சனை மற்றும் இதர காரணங்களுக்காக கொம்பு வச்ச சிங்கம்டா படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது.

இதையும் படிங்க: துக்ளக் படிக்கிற குடும்பம்னா இப்படித்தான் இருக்கும்... ரஜினி பேரனின் சேட்டையை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

தளபதி விஜய்யின் ''மாஸ்டர்'' படம் தமிழ் புத்தாண்டிற்கு 5 நாட்கள் முன்னதாக ரிலீஸ் ஆக உள்ள நிலையில், புத்தாண்டு தினத்தன்று சசிக்குமார் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.