இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் சர்கார் திரைப்படத்தின் மீது தான் , விஜய் ரசிகர்கள் தங்கள் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையுமே கொட்டி வைத்திருக்கின்றனர். அரசியல் கதைக்களம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்த விஜய் ரசிகர்களை , குஷிப்படுத்தும் வகையில் சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் “சிம்டாங்காரன்” எனும் பாடல் நேற்று ரிலீசாகியது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் ஒரு கலக்கல் விருந்து வரப்போகிறது என  காத்திருந்த விஜய் ரசிகர்களை , இந்த சிம்டாங்காரன் பாடல் மிகவும் ஏமாற்றிவிட்டது என்றே இப்போது கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் சர்கார் பாடலுக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு , அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான பாடலாக இது அமையவில்லையாம். அதை எல்லாம் விட என்ன கொடுமை என்றால், இந்த பாடலை கேட்ட சிலர் ”இது தேவா பாடல் தானே ரொம்ப நல்லா இருக்கு” என்று கமெண்ட் செய்திருப்பது தான். 

இது ஏ.ஆர்.ரஹ்மான் இசை மாதிரியே இல்லை என ஒரு கூட்டமும். ஏ.ஆர்.ரஹ்மான் இசை எப்போதுமே இப்படி தான் “கேட்ட உடனே ஈர்க்காது.. கேட்க கேட்க தான் ஈர்க்கும்” என ஒரு கூட்டமும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் இன்னொரு ட்ராபேக் என்னவென்றால் விவேக்கின் பாடல் வரிகள் எதுவுமே புரியும் படியாக இல்லை என்பது தான். இதுக்கு தான் இவ்ளோ பில்டப் கொடுத்தீங்களா விவேக் சார்? என செம கடுப்பாகி இருக்கின்றனர் விஜய் ரசிகர்களே. சரி இந்த பாடல் போனா என்ன, படம் சூப்பரா இருக்கும். என தொடர்ந்து மனதை தளரவிடாமல், நம்பிக்கையுடன் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்கின்றனராம், இந்த சிங்கிள் ட்ராக் ரிலீசுக்கு பிறகு.