Asianet News TamilAsianet News Tamil

சர்கார் இசை வெளியீட்டு விழா..! அதிகார பூர்வ தகவல் வெளியானது..!

தளபதி விஜய்யின் 'சர்கார்' படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய, அதிகார பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

sarkar audio launch conform information
Author
Chennai, First Published Aug 24, 2018, 7:00 PM IST

தளபதி விஜய்யின் 'சர்கார்' படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய, அதிகார பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி, படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த வாரம் இறுதியாக மிச்சம் இருந்த விஜயின் ஓப்பெனிங் பாடல் மற்றும் சண்டை காட்சிக்காக அமெரிக்கா சென்று திரும்பினர் படக்குழுவினர்.

sarkar audio launch conform information

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை  பிரம்மாண்ட நடத்த சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 'மெர்சல்' படத்திற்கு செய்தது போலவே, சர்கார் ஆடியோ விழாவில் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டேஜில் பர்பார்ம் செய்யவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலை ரசிகர்கள் "SarkarAudioFromOct2' என்கிற ஆஷ்டாக் பயன்படுத்தி வைரல் ஆக்கி வருகிறார்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios