இந்திய சினிமாவில்,  இயக்குநர்கள் பலரும் பணிபுரிய விரும்பும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவையும் தாண்டி, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று, சினிமா உலகில் தன்னுடைய திறமையை பல்வேறு வகையிலும் வெளிக்காட்டியர் இவர் என்றும் கூறலாம். 

விஷுவல் மொழிக்கும் ஒரு இலக்கணம் உண்டு ஏன்பதை தன்னுடைய ஓவ்வொரு திரைப்பதிலும், தன்னுடைய காட்சிகள் மூலம் நிரூபித்தனர் சந்தோஷ் சிவன்.

இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவர் என்றே கூறலாம் இதுவரை இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ரோஜா, தளபதி, உயிரே, ராவணன் என தொடர்ந்து அவருடன் பணியாற்றியுள்ளார். மேலும் விஜயின் துப்பாக்கி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. மேலும் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும், பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர்கள் பற்றி பதிவிட்டுள்ள ஒரு பதிவு திரையுலகினர் மத்தியில் கடும் விமர்சனனத்தை சந்தித்து வருகிறது.

இந்த பதிவில் ஒரு நாய் குட்டியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பணம் கொடுக்கும் போது தயாரிப்பாளர்கள் முகம் எப்படி இருக்கும்... இதுவே கதாநாயகிகளுக்கு பணம் தரும்போது அவர்களுடைய முகம் எப்படி இருக்கும் என்பதையும் குறிக்கும் விதத்தில் உள்ளது. இந்த மோசமான பதிவிற்கு பலர் இவருக்கு எதிராக தனங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

சர்ச்சை பதிவு இதோ: