சண்டக்கோழி 2 பாடல் காட்சி படப்பிடிப்பு துவங்கியது (வீடியோ)

Sandakozhi 2 song shooting pooja video
First Published Sep 20, 2017, 5:19 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் விஷால் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம்  'சண்டக்கோழி', இந்தப் படம் விஷால் திரைப்பயணத்தில் திருப்புமுனையாகவும் அமைந்தது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதனை முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே  இயக்குகிறார். அதேபோல் முதல் பாகத்தில்  நடித்த கலைஞர்களே இந்தப் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்

விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்திற்காக மதுரையைப் போலவே சென்னை போரூர் அருகே செட் போட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில், தற்போது பாடல் கட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது. அதற்கான பூஜை இன்று போடப்பட்டது. இதில் விஷால், லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரன்  மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  

Video Top Stories