திருமணத்திற்கு பிறகும், கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் சமந்தாவிற்கு, தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் அதிக படியான ரசிகர்கள் உள்ளனர். 

கடைசியாக இவர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சீமராஜா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை என்றாலும் விரைவில் இவர் நடிப்பில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் தற்போது விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்ற, '96 ' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்பது நாம் அறிந்தது தான். 

இந்நிலையில் ரசிகர்களை ஷாக் ஆக்கும் மிகவும் மாடர்னாக, கருப்பு நிற உடை அணிந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா. இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரத்திலேயே லட்ச கணக்கில் லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர் ரசிகர்கள். 

அந்த புகைப்படங்கள் இதோ: