நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா, யுடர்ன், தெலுங்கில் ரங்கஸ்தலம் ஆகிய படங்களில் வெளிவந்தது. இவர் நடித்து வெளியான படங்களும் தொடர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்தது.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி ஜோடியாக 'சூப்பர் டீலக்ஸ்' என்ற ஒரு படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. தொடர்ந்து பல இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும் எந்த படத்திலும் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார். இதனால் சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு விட்டு சில காலம் இவர் குடும்ப வாழ்க்கையை கவனிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் இந்த தகவலை சமந்தாவின் கணவர் நாகசைதன்யா மறுத்துள்ளார். மேலும் சமந்தா சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு மட்டுமே எடுக்க உள்ளதாகவும் இதனால் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளிநாடு சென்றுள்ள சமந்தா... மிகவும் மோசமான உடையில், போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பல ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு, உள்ளதாக விமர்சித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்: