இரும்பு திரை படத்தின் 100 வது நாள் வெற்றி விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், விஷால், அர்ஜுன், நடிகை சமந்தா உட்பட படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்சியயை சிறப்பித்தனர்.

பொதுவாக விஷால் இது போன்ற விழாக்களின் போது ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் அதே போல் இந்த விழாவின் போதும், கீர்த்தனா, ஐஸ்வர்யா என்ற இரு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய.. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். "எவனொருவன் தாய் தந்தையை மதிக்கிறானோ அவனை ஆண்டவன் உயர்த்திக் கொண்டேயிருப்பான்" என தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார். 

பின் முன்பெல்லாம் பல படங்கள் 100 நாட்களை கடந்து ஓடும். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஜில்லாவிற்கு பிறகு இந்த படம் தன் நூறு நாட்களை எட்டியிருக்கிறது என கூறினார்.

சங்கத்திற்கு நான் போகலவில்லை என்றாலும், அதை மதிக்கிறேன். திரையரங்க உரிமையாளர்கள் சிறு படங்களை மதிப்பதேயில்லை. சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இன்னும் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும் என்று விஷாலுக்கு கோரிக்கை வைத்தார்.

பின் விஷாலை பார்த்து  உங்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது. திரைப்படத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, எதிர்த்து போராடவில்லை என்றால் அடையாளத்தை இழந்து விடுவோம். ஆகையால், அதை எப்பொழுதும் விட்டுவிடக் கூடாது என்றும் கூறினார்.

காசுக்கு ஓட்டுப் போடுவதை மக்கள் நிறுத்த வேண்டும். நீங்கள் திருந்தி விட்டு, எங்களை வழிநடத்த வாருங்கள் என்று சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம் என்று ஆவேசமாக கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.