Asianet News TamilAsianet News Tamil

ரோபோ ஷங்கருக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த மனைவி! வைரலாகும் புகைப்படம்!

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் பிறந்த நாள் அன்று அவருடைய மனைவி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சர்பிரைசாக கேக் வெட்டி, அவருக்கு தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
 

robo shanker wife give the sweet surprise for her husband
Author
Chennai, First Published Jan 29, 2020, 12:20 PM IST

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் பிறந்த நாள் அன்று அவருடைய மனைவி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சர்பிரைசாக கேக் வெட்டி, அவருக்கு தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

robo shanker wife give the sweet surprise for her husband

சின்னத்திரையில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கியவர் ரோபோ ஷங்கர். மெல்ல மெல்ல, தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டு, தற்போது தனுஷ், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

robo shanker wife give the sweet surprise for her husband

அதே போல் அவருடைய மனைவி சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் அசத்தி வருகிறார். விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பிகில்' படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

robo shanker wife give the sweet surprise for her husband

இந்நிலையில், கணவரின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், ரோபோ ஷங்கரின் மனைவி, மற்றும் மகள் இருவரும் கேக் வெட்டி கொண்டாடியதோடு, தங்க சங்கிலியைக்கும் பரிசாக கொடுத்துள்ளனர்.  ரோபோ சங்கரின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் ஆன போதிலும்... இந்த குடும்பத்தின் பாசம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios