நடிகை நயன்தாரா நடிப்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகியுள்ள, 'தர்பார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பல்வேறு திரையரங்கங்களில் ஓடி வருகிறது. மேலும் இந்த படத்தின் எச்.டி.பிரிண்ட் வெளியான போதிலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

தலைவர் படம் ஓட கூடாது என்பதற்காகவே சிலர் படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டது மட்டும் இன்றி, படம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக, தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கமிஷ்னர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.

ஆனால், நயன்தாரா ஒரு படத்தை முடித்து வெளியேறியதும் அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கி விடுகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்திலும், நெற்றிக்கண் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

'மூக்குத்தி அம்மன்' படத்திற்காக படப்பிடிப்பு துவங்கிய நாளில் இருந்து, காலில் செருப்பு அணியாமலும், அசைவ உணவுகளை தவிர்த்தும் விரதம் இருந்து நடித்து வருகிறார் நயன்தாரா என படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கூறி இருந்தார். அதே போல் நயன்தாராவும் இந்த படத்தில் நடிக்க துவங்கியதில் இருந்து, தன்னுடைய காதலனுடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்தார்.

 

44 நாட்களில், 90 சதவீதம் இந்த படத்தின் படப்பிடிப்பு, கன்யாகுமரியில் நடந்து முடிந்து விட்டதாகவும், அதற்கு தன்னுடைய படக்குழுவினருக்கு, நயன்தாராவுடனான, ஷூட்டிங் நினைவுகள் மறக்க முடியாதவை என ட்விட் செய்து, நயனை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது.