பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடி பிக்பாஸ் சீசன் 2 , டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை தன்வசம் ஆக்கிக்கொண்டவர் நடிகை ரித்விகா.

இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து இவரை பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் சூர்யா என்கிற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யமடைய வைத்துள்ளது.

ஆம், ரிதிவிக்காவின் தந்தையும், பழம்பெரும் நடிகர் சிவகுமாரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாம். இதன் மூலம் ரித்விகாவிற்கு சூர்யா மற்றும் கார்த்தியை சிறு வயதில் இருந்தே தெரியுமாம். 

எந்த ஒரு நடிப்பு பின்னணியும் இல்லாமல் வெள்ளித்திரைக்கு வந்து, குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்த வந்த இவருக்கு... சூர்யா தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தன்னுடைய சிறு வயது தோழிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

ரித்விக்கவும் சூர்யாவின் எதிர்ப்பரப்பின் படி, தன்னுடைய நடுநிலையான குணத்தால், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வெற்றியாளராக மாறியுள்ளார். மேலும் தற்போது ரித்விகாவின் சிறு வயது குடும்ப நண்பர் சூர்யா என்பது வெளியாகியுள்ளது.