நடிகர், நடிகைகள் கிகி சேலஞ்சில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் டிரேக், கிகி டூ யு லவ் மி? என்ற பாடலை இவர் சமீபத்தில் எழுதி பாடியுள்ளார். கிகி பாடலும் ஹிட்டானது. இவருக்கு கோடிக்க்கணக்கான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உள்ள நிலையில், ஷிகி என்ற நகைச்சுவை நடிகர் கிகி பாடலை மேலும் ரைவலாக்கியுள்ளார். அவரின் காரில் டிரேக்கின் கிகி பாடல் ஒலிக்கும். அப்போது காரிலிருந்து குதித்து வெளியே குதித்து, நடனம் ஆடுவார். பிறகு அதே காரில் ஏறிக் கொள்வார். இந்த நிகழ்வுகளை காரில் உள்ளே இருப்பவர்கள் வீடியோவில் பதிவு செய்வார்கள். இதற்கு பெயர் தான் கிகி சேலஞ்ச்.

அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின், அரபு நாடுகளிலும் இந்த கிகி சேலஞ்சுக்கு ஆண், பெண்கள் உட்பட பலரும் காரில் இறங்கி டான்ஸ் ஆடுகின்றனர். இந்த பாடல் பதிவுகளை ஆன்லைகளின் பதிவு செய்வதால் வேகமாக பரவி வருகிறது. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைக்கும் இளைஞர்கள் இந்த கிகி சேலஞ்ச் மோகத்துக்கு அடிமையாகி வருகின்றனர். தற்போது இந்தியாவிலும் கிகி சேலஞ்ச் டிரெண்ட் ஆகியுள்ளது. நம் ஊரை சேர்ந்த பாடல்களும் ஆங்கில பாடல்களையும் இந்தியாவில் கிகி சேலஞ்சுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இளைஞர்கள் மட்டுமின்றி, திரை நட்சத்திரங்களும் இந்த கிகி சேலஞ்சுக்கு களம் இறங்கியுள்ளனர்.

அண்மையில், திரைப்பட நடிகை ரெஜினா கசான்ட்ராவும் காரில் இருந்து இறங்கி கிகி டான்ஸ் ஆடி வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. நடிரை ரெஜினாவின் டான்ஸூம் இளைஞர்களை கிகி சேலஞ்ச் செய்ய வைக்க தூண்டுகின்றது. கிகி சேலஞ்ச் பாடல்களுக்கு காரை விட்டு சாலையிலே வேறு ஏதாவது இடத்திலோ சென்று கொண்டிருக்கும் போது, நாம் ஆடுவதில் கவனம் செலுத்துவோம். அதனால் எதிரே வரும் வாகனங்கள் மீதோ, வேறு ஏதாவது பொருட்களின் மீதோ மோதி விபத்து ஏற்படுகிறது.
 
இதனால் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காருக்குள் இருப்பவர், கிகி டான்ஸ் ஆடுபவரின் மீது கவனத்தை வைப்பதால், எதிரே வருவோரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதனால், கிகி டான்ஸ் ஆடுவோருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர், ரெஜினா போன்ற திரையுலக நட்சத்திரங்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.