'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் சமீப காலமாக, திரைப்பட வாய்ப்புகளுக்காக உச்சகட்ட கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

மேலும் வெளிநாடுகள் சென்றால் கூட, உச்ச கட்ட கவர்ச்சியில் அரை குறை உடையுடன்... போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.


அதே போல் கடந்த மாதம் கூட காதலர் தினத்தை முன்னிட்டு, உடைகள் போடாமல், ரோஜா பூக்களை மட்டுமே மேல போட்டு கொண்டு, பாத் டப்பில் படுத்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. 

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக ஷாலு ஷம்மு கலந்து கொண்டுள்ளார். அதில் அவருடைய போட்டோ ஷூட்டுக்கு ஏற்ற போல்... போஸ் கொடுப்பார்கள் பாய்ஸ் என தொகுப்பாளர் கூறினார்.

ஷாலு ஷம்முவும் சிரித்து கொண்டேனா ஓகே என்று சொன்னார். எடுத்ததுமே ஷாலு ஷம்முவின் உடை போடாத, ரோஜா மலர் மட்டுமே மேல போட்டபடி இருக்கும் போட்டோவை அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியிட்டதும், கோபமான ஷாலு ஷம்மு, ஏன் இப்ப இந்த போட்டோ... என கூறியபடி வாக் அவுட் செய்வதாக கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். 

இதுகுறித்த ஒரு புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ...