ஒரே ஒரு மெகா ஹிட் திரைப்படத்தின் நடித்ததை தொடர்ந்து தனக்கு வாய்ப்பு கொடுத்து பிரபல நடிகையாக்கிய காதலனை பிரபல நடிகை கழட்டிவிட்டுள்ளார். அண்மையில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் கீதா கோவிந்தம். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்கம் இன்கம் காவலே பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பாடலில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா. துவக்கம் முதல் இறுதி வரை பாடலில் ராஷ்மிகாவின் பெர்பார்மன்ஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

 

இந்த ஒரே பாடல் மூலம் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் ராஷ்மிகா மிகவும் பிரபலம் ஆனார். பாடலைப் போலவே அந்த பாடல் இடம்பெற்றுள்ள கீதா கோவிந்தம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி. விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ள கீதா கோவிந்தம் வெளியான சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுலையில் நடிகர் ராக்சித் ஷெட்டியுடன் தான் செய்து கொண்ட நிச்சயதார்தத்தை நடிகை ராஷ்மிகா முறித்துக் கொண்டுள்ளார். 

இத்ததனைக்கும் ராஷ்மிகாவிற்கு கன்னடத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்ததே ராக்சித் ஷெட்டி தான். தான் கதை எழுதி நடித்த கிரிக் பார்ட்டி திரைப்படத்தில் ராஷ்மிகாவுக்கு முக்கிய கதாபாத்திரைத்தை ராக்சித் பெற்றுக் கொடுத்தார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இருவரும் காதலில் வீழ்ந்தனர். தொடர்ந்து கடந்த ஆண்டு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

இந்த நிலையில் தான் கீதா கோவிந்தம் எனும்தெலுங்கு படம் மூலம் ராஷ்மிகா மிகப்பெரிய நடிகையானார். தொடர்ந்து இரண்டு பெரிய பட்ஜெட் தெலுங்கு படங்களிலும் இரண்டு கன்னட படங்களிலும் ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். முன்னணி நடிகர்கள் பலரும் ராஷமிகாவுடன் ஜோடி போட காத்திருக்கின்றனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டால் திரைப்பட வாய்ப்புகள் பறிபோகும் என்று ராஷ்மிகா கருதியுள்ளார். இதனை தொடர்ந்தே தன்னை ஏற்றிவிட்ட ஏணி போன்ற நடிகர் ராக்சித்துடனான நிச்சயதார்தத்தை முறித்துக் கொள்வதாக ராஷ்மிகா அறிவித்துள்ளார்.