பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் திருமணத்துக்கு செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு 
விதிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டைச் சேர்ந்த தீபிகா படுகோனும், ரன்வீர்சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். 

விழாக்களுக்கு ஒன்றாக வரும் இவர்களின் நெருக்கம், பத்மாவத் படத்துக்கு பிறகு அதிகமாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஜோடி, அமெரிக்காவில் ஒன்றாக சுற்றிய புகைப்படங்கள் அவர்களின் நெருக்கத்தை உறுதிப்படுத்தின. திருமணம் பற்றி தீபிகாவிடம் 
கேட்டபோது விரைவில் தெரியப்படுத்துகிறேன் என்று மட்டும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தீபிகா படுகோனும் - ரன்வீர் சிங்கும் நவம்பர் 19 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 
அவர்களது திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பதாக செய்தி வெளியானது.இந்த திருமணத்துக்கு குடும்பத்தினர் உட்பட மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் திருமணத்துக்கு வருபவர்கள் மொபைல் போன் எடுத்து வர வேண்டாம் என்றும் மணமக்கள் தரப்பில் தெரிகிறது. எதற்காக என்றால், திருமண புகைப்படங்கள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.