பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவத்திற்கும், பிரபல டிவி தொகுப்பாளர் தீபக் காலால் என்பவருக்கும் டிசம்பர் 31 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடைபெற உள்ளது. 

இந்த திருமணம் குறித்து தற்போது இவர்கள் தங்களுடைய திருமணம் பத்திரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை ராக்கி சாவத் கூறுகையில்... தங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது உண்மைதான். இந்த திருமணம் நடைபெற முக்கிய காரணாம் மீடியா தான். இது தான் நான் திருமணம் செய்து கொள்ள சரியான நேரமாகவும் நினைக்கிறேன்.

முதலில் தீபக் தன்னிடம் காதலை கூறிய போது... உடனடியாக அவரது காதலை நான் ஏற்றுக்கொண்டேன். ஏற்கனவே நாட்கள் கடந்து விட்டதால் தற்போது திருமண நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டு இருக்கிறோம். மேலும் தன்னுடைய திருமணம் குறித்து அனைத்து தகவல்களையும் எப்போதும் என்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறேன். அவர்களின் ஆசீர்வாதம் தனக்கு தேவை என்று கூறியுள்ளார். 

அதே போல் பாலிவுட் திரையுலகை சேர்ந்த அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க ஏற்படு செய்துள்ளோம். ஏற்கனவே நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் இருவரும் திருமணத்திற்கு வர சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளார். 

மேலும் இந்த திருமண பத்திரிக்கையோடு சேர்த்து மற்றொரு போஸ்ட் போடப்பட்டுள்ளது. அதில் திருமணத்திற்கு முன்னதாக ராக்கி சாவத்தும் அவருடைய வருங்கால கணவர் தீபக்கும் சேர்ந்து மருத்துவரை அணுகியதாகவும்... இவர்கள் இருவரும் விர்ஜின் அதாவது கன்னி காழியாதவர்கள் என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்ததாகவும் ஒரு போஸ்ட் போட்டுள்ளனர். 

இதனை கலாய்க்கும் விதமாக ராக்கி சாவத்தின் முதல் திருமணத்தை சுட்டி காட்டி பல ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!