தமிழில் எண் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதாத்தாவுடன் மோதினார். சண்டிகரில் நடத்த குத்து சண்டை போட்டியில் பெண் வீராங்களையிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

இந்நிலையில் 40 வயதாகும் ராக்கி சாவந்திக்கும், 45 வயதாகும் நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக் கலால் என்பருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. 

அதன் படி இவர்களுடைய திருமணம் டிசம்பர் 30 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ்  நகரில் நடக்கிறது. இவர்களுடைய திருமண அழைப்பிதழை இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

இவர்களுடைய திருமணம் குறித்து ராக்கி சாவந்த் கூறும்போது " நானும் தீபக்கும் டிவி, நிகழ்ச்சியில் சந்தித்த போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. தற்போது ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு திருமணத்திற்கு தயாராகி உள்ளோம். 

எங்கள் திருமணத்திற்கு ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படு கோனே, கரீனா கபூர், உள்ளிட்ட நடிகர் நடிகைகளை அழைத்துள்ளோம் என்றார். 

மேலும் இது குறித்து தீபக் கூறும்போது... டிவியில் ராக்கியின் நடனத்தை பார்த்து ரசித்துளேன். அவரை திருமணம் செய்வேன் என கவனவில் கூட நினைக்கவில்லை ஆனால் தற்போது அது நிஜமாகியுள்ளது. எங்களுடைய திருமணம் நிர்வாணமாக நடைபெறும். ஆடைக்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுப்போம் என்று கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.