பிரபல நடன இயக்குனரும், நடிகரும், திரைப்பட இயக்குனருமான ராஜு சுந்தரம்,  கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு அஜித் நடித்த 'ஏகன்' படத்தை இயக்கி, அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.  இதனால் மீண்டும் நடனம் இயக்குவதில் ஆர்வம் காட்டினார்.  இந்நிலையில் இவர் திரைப்படம் இயக்கி 11 ஆண்டுகள் ஆகும் நிலையில்,  மீண்டும் பிரபல முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார்.

இவர் இயக்க உள்ள தெலுங்கு படத்தில்,  நடிகர் சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.  சர்வானந்த் ஏற்கனவே தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'எங்கேயும் எப்போதும்'  படத்தில் அனன்யாவிற்கு ஜோடியாக நடித்தவர். 

மேலும் விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்து வெற்றி பெற்ற '96 ' படத்தின் தெலுங்கு ரீமேக்கில், விஜய் சேதுபதி நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜு சுந்தரம் - சர்வானந்த் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.