கபாலி, காலா படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்  முதல்முறையாக பாலிவுட் படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் கபாலி, காலா என இரு படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் ரஞ்சித். திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல் சமூக செயல்பாடுகளிலும் பங்கெடுத்துவருகிறார். ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலைத் தனது படங்களில் முன்வைக்கும் ரஞ்சித், ரஜினியுடன் முதன்முறை இணைந்த போதே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கபாலி படம் பொதுவான பார்வையாளர்களிடம் வரவேற்பு பெற்ற போதும் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்று கூறப்பட்டது. ரஜினி படமாக அல்லாமல் ரஞ்சித் தனது அரசியலைப் பரப்புவதற்காக ரஜினியை பயன்படுத்திக்கொள்கிறார் என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. மீண்டும் "காலா" மூலம் ரஜினி ரஞ்சித் படத்தில் இணைந்தது அவர் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முடிவுகட்டுவதாய் அமைந்தது. காலா திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சனரீதியாகவும் வரவேற்பு பெற்றது.  

ரஞ்சித் அடுத்ததாக விஜய்க்கு கதை சொல்லவுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை. ரஞ்சித்தின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் ஆமீர் கானை கதாநாயகனாகக் கொண்டு அவர் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் அடிபடத் தொடங்கியது.

இது குறித்து  வெளியான தகவலில். “ஹிந்தியில் படமெடுக்க வரலாற்றுத்  திரைக்கதையை ரஞ்சித் உருவாக்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான "நமா பிக்சர்ஸ்" தயாரிப்பில்   ரஞ்சித் இயக்கவுள்ளார். இதற்காக ஆமீர் கான், ரன்பீர் கபூர் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது.