சூப்பர் ஸ்டார் ரஜினி, பேட்ட படத்திற்காக, உத்தரபிரதேசத்தில் இந்துக்களின் புனித தலம் ஒன்றில் தற்போது ஷூட்டிங் நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படம் முடிவடைந்த பின்னர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், தற்போது, பேட்ட படம் பற்றி தற்போது தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் பாசிட்டிவான தகவல்களும், ரஜினி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

பேட்ட படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் ஆகியோரும் நடித்து வருவதால், படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெறுவதாக, படக்குழு தெரிவித்துள்ளது.  பேட்ட படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை டார்ஜிலிங்கில் முடித்துக் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி, சென்னை திரும்பி சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றார்.

 

இந்த நிலையில், பேட்ட படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்குகிறது. இந்துக்களின்  மிகவும் புனித தலமாக கருதப்படும் வாரணாசி, இந்தியாவின் கோவில் நகரமாகும். காசி விஸ்வநாதர் ஆலயம் தொடங்கி, பல்வேறு கோயில்களை உள்ளடக்கிய வாரணாசி, பிரதமர் மோடியின் எம்.பி. தொகுதியும் என்பது கூடுதல் தகவல்.

இறுதிகட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பொங்கலுக்கு பேட்ட படத்தை ரிலிஸ் செய்ய வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.