அக்டோபர் 1ம் தேதி துவங்கி வாரணாசி, லக்னோ பகுதியில் நடந்து வரும் ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் 2 வது லுக் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டு வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

படத்தின் இந்த ஷெட்யூலில்தான் நடிகை த்ரிஷா கமிட் ஆகியிருக்கிறார். இவருடன் ’பேட்ட’ திரைப்படத்தில்,  சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினி மிக இளமையாகக் காட்சி அளிக்கும் மேற்படி ஸ்டில்லைப் பார்த்து அவரது ரசிகர்களது பதிவுகளில் உற்சாக கமெண்ட்கள் பறக்கின்றன.

இன்னொரு பக்கம்’தேவர் மகன்’ கமலைக் காப்பியடிச்ச மீசை. விக்ரமோட கெட் அப். அப்படியே சிங்கம் சூர்யா மீசையை, வீரமான  அஜித் போல, விசுவாசம் மிசைக்கு இணையாக   அளவெடுத்துட்டாங்க’ என்று நெகடிவான கமெண்டுகளும் நடமாடுகின்றன.

படப்பிடிப்பில் கலந்துகொள்ள முதல்நாளன்று த்ரிஷாவை இறுகக் கட்டித்தழுவிக்கொண்ட ரஜினி ‘உன்னோட 96’ படம் சூப்பரா இருக்குன்னு கேள்விப்பட்டேன். சென்னைக்குத் திரும்பின உடனே சேர்ந்து பாக்குறோம்’ என்று உற்சாகப்படுத்தியிருக்கிறாராம்.