ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சிதிக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

முன்னாள் ராணுவ வீரராக இருந்து பின்னர் கல்லூரி ஹாஸ்டல் வார்டனாக ரஜினிகாந்தும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்கள். ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.  பேட்ட படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், கடந்த 7-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. 

மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள இசை, ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பேட்ட படத்தின் டெராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால், சில காரணங்கள் காரணமாக சென்னை புறநகரில் பிரம்மாண்ட செட்போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். படத்தின் முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தில், சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதால், அம்மாநில அரசு ரஜினியின் பாதுகாப்புக்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளதாம்.