விஜய் டிவி தொலைக்காட்சியில் 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர்கள், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலில் கணவன் மனைவியாக நடித்த இவர்களுக்குள், உண்மையாகவே காதல் துளிர்விட, பல்வேரு பிரச்சனைகளை கடந்து அது திருமணத்திலும் முடிந்தது.

விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில், அனைத்து பிரபலங்கள் மத்தியிலும் மிகவும் ப்ரமாணடமாக நடந்தது இவர்களது நிச்சயதார்த்தம். ஆனால் இவர்களது திருமணம், மிக நெருக்கமானவர்கள் மத்தியில் ரகசியமாக நடந்தது.

திருமணத்திற்கு பின் ஆலியா, சின்னத்திரையில் நடிப்பதற்கு ஒரு பிரேக் கொடுத்திருந்தாலும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.

சமீபத்தில் தான் ஆலியா, அவர் கட்டிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறிய நிலையில், இப்போது மற்றொரு சந்தோஷமான விஷயம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆலியா மானசா கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த ஆனந்தத்தை அவர்கள் கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அரசால் புரசலாக சில தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், இது உண்மையா அல்லது வதந்தியா என்பதை கூறவேண்டும்.