Asianet News TamilAsianet News Tamil

ராஜமௌலியின் தந்தையின் திரைக்கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்; அதுவும் இரண்டு பாகமாக வரப்போகுதாம்…

Raghava Lawrence plays Rajmaulis fathers screenplay Its going to be part two ...
Raghava Lawrence plays Rajmaulis fathers screenplay Its going to be part two ...
Author
First Published May 26, 2017, 11:54 AM IST


மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பாகுபலி படத்தின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ள புதிய சரித்திர படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படம் 18 அல்லது 19-ஆம் நூற்றாண்டில் நடந்த சரித்திரக் கதையாம். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் சொன்னது:

“தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இந்த கதை எழுதப்பட்டுள்ளதால், படத்தின் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நான் பொறுத்தமாக இருப்பேன் என என்னிடம் விஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.

மேலும், கதையின் ஒன் லைனை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. எனவே உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

தற்போது படத்தின் கதையை முழுவதுமாக எழுதி முடிக்கும் பணியில் விஜேந்திர பிரசாத் ஈடுபட்டு வருகிறார்.

இது மிகப்பெரிய கதை என்பதால் இரண்டு பாகங்களாக திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios