பத்து வருஷம் ஆச்சு! சின்மயி பற்றி ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சு!
ME TOO ஹேஷ் டேக் மூலம் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பகிர்ந்து வரும் விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் தனுஸ்ரீ ,நானா படேகர் மீது குற்றம் சாட்டியது ஒரு பக்கமும், சின்மயி வைரமுத்து மீது தெரிவித்திருக்கும் புகார் இன்னொரு பக்கமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த ME TOOக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பல கருத்துக்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது.
ME TOO ஹேஷ் டேக் மூலம் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பகிர்ந்து வரும் விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் தனுஸ்ரீ ,நானா படேகர் மீது குற்றம் சாட்டியது ஒரு பக்கமும், சின்மயி வைரமுத்து மீது தெரிவித்திருக்கும் புகார் இன்னொரு பக்கமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த ME TOOக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பல கருத்துக்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது. பிரபல நடிகர் ராதாரவி மீதும் இந்த விஷயத்தில் ஒரு பெண் புகார் அளித்திருக்கிறார்.
சின்மயியும் கூட ராதாரவி டப்பிங் யூனியனின் தலைமை பொறுப்பில் இருப்பதால் தானும் பல பிரச்சனைகளை சந்தித்ததாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றின் போது இந்த ME TOO விவகாரம் குறித்து மிகவும் காரசாரமாக பேசி இருக்கிறார் ராதாரவி. ஒரு ஹீரோயின் மேக்கப் போடும் போது அந்த அறைக்குள் டைரக்டர் போனார்னா அதோட அவர் கதை முடிஞ்சுது. அந்த அளவிற்கு இப்போ நிலமை இருக்கு. எங்களால ஹீரோயினை நடு ரோட்டில் உட்கார்ந்து மேக்கப் போட சொல்ல முடியாது. சினிமாவோட முன்னேற்றத்தை பற்றி யோசிக்கும் போது இது மாதிரியான குற்றச்சாட்டுக்கள் ரொம்பவே நெகடிவானது.
முன்னாடி எல்லாம் இப்படி கிடையாது. டைரக்டர் ,கேமராமேன், ஹீரோ, ஹீரோயின் என எல்லார் மத்தியிலும் ஒரு நல்ல புரிதல் இருந்தது. இப்போ அப்படி இல்லை. இப்படியே போனா பாலியல் தொல்லை பற்றின பயம் மட்டும் தான் இருக்கும். நடிப்பதற்கான ஒரு பாதுகாப்பான இடமா ஷூட்டிங் ஸ்பாட் தோணாது. உங்களுக்கு ஆங்கிலம் தெரியும்னா அதுக்காக இப்படி ஆங்கிலப்பத்திரிக்கைகளுக்கு போய் பாலியல் தொல்லை குறித்து பேட்டி கொடுப்பீங்களா? இது சினிமாவுக்கு கொஞ்சம் கூட நல்லது இல்லை.
இந்த விஷயத்தில் சித்தார்த் சொன்னது தான் சரி ஆண்களுக்கும் கூட இது மாதிரியான பிரச்சனைகள் இருக்குது. விஷால் சொன்ன மாதிரி உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா உடனே அது குறித்து புகார் செய்யனும். இப்படி 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விவகாரத் தை எல்லாம் இப்போ எதுக்கு சொல்லனும்? மொத்தத்தில் இந்த ME TOO இயக்கம் எல்லாம் அரசியல்வாதிகளுக்கும், போலி சாமியார்களுக்கும் தான் என சொல்லி தன் பேட்டியை முடித்திருக்கிறார் ராதாரவி. இதனால் அவரின் பேச்சு இப்போது கூடுதல் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.