சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடிகர் சசிகுமாரின் ராஜ வம்சம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகிபாபு, ரேகா, மனோபாலா, தம்பி ராமையா ஆகியோர்  மற்றும் சிறப்பு விருந்தினராக, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ராதா ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி, "இந்த பொண்ணு எல்லா விஷயத்துக்கும் பொருந்தும் பொண்ணு" என்று நடிகை நிக்கி கல்ராணியை குறிப்பிட்டு பேசினார். நான் ஏதோ நல்ல எண்ணத்தில நடிகையை பற்றி சொல்லப்போக,அது தப்பா போயிடுது. இப்படித்தான் தெரியாத்தனமாக பிரபல நடிகையை  பற்றி எதேச்சையாக பேசினேன். வேலை வெட்டி இல்லாதவங்க ட்விட்டரில் போட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டார்கள். அது பூகம்பம் மாதிரி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது” என்று நயன்தாராவின் விவகாரம் குறித்து சூசகமாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நான் எப்ப எதை பேசினாலும், வேறொரு பொண்ணு ரெடியாக இருக்கிறார். இவன் எப்ப எதையாவது தப்பா சொல்லுவான், உடனே அதை டுவிட்டரில் போட்டு தட்டலாம் என காத்துக்கொண்டிருக்கிறார்.  தேவையில்லாத வேலைகளை வேலைவெட்டி இல்லாதவர்கள் செய்து கொண்டு வருவார்கள்” பிரபல பாடகி சின்மயியையும் சாடைமாடையாக விமர்சித்துள்ளார்.