pushpa : புஷ்பா பட ஐட்டம் பாடலில் சமந்தா மட்டுமல்ல ‘மாஸ்டர்’ பட நடிகையும் இருக்காங்க - வைரலாகும் வீடியோ
புஷ்பா (pushpa) படத்தை புரமோட் செய்யும் வகையில், இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா (samantha) கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற டிசம்பர் 17-ந் தேதி ரிலீசாக உள்ளது. படத்தை புரமோட் செய்யும் வகையில், இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். அவர் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறை.
இப்பாடல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இப்பாடலின் தமிழ் பதிப்பை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். தமிழில் இப்பாடலை ஆடியோ வடிவில் மட்டும் வெளியிட்டுள்ளனர். அதே வேளையில் தெலுங்கில் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்களுடன் கூடிய லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.