தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்திருந்த கண்ணே கலைமானே படத்தின் மூலம், வேறுவிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'சைக்கோ'. இந்த படத்தை, இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருந்தார். மிஷ்கின் கதைகள் எப்போதுமே மாறுகட்ட கதை, கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் என்பதற்கு இந்த படமும் விதிவிலக்கு அல்ல, என்பதை நிரூபித்தது.

கண் தெரியாத இசை கலைஞர் வேடத்தில் நடித்திருந்தார் உதயநிதி. கதாநாயகிகளாக நடிகை அதிதி ராவ், மற்றும் நித்தியா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் ராம், ரேணுகா, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மேலும் செய்திகள்: பறக்கும் ஆபரேஷன் கத்திகள் நடுவே... கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்! 
 

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். டபுள் மீனிங் புரோடுக்ஷன் இந்த படத்தை தயாரித்திருந்தது. 

இந்த திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் பல திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், இந்த படத்தின் வெற்றிக்கு நடிகர் உதயநிதி தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.