டிமிக்கி கொடுத்த வடிவேலு! ஆப்பு அடித்த தயாரிப்பாளர் சங்கம்! நடந்தது என்ன?

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 14, Sep 2018, 6:17 PM IST
producer council show the red card for vadivelu
Highlights

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த சரித்திர காமெடிப் படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி செம்ம ஹிட் அடித்தது. தற்போது, இப்படத்தின் 2ம் பாகமான “இம்சை அரசன் 24ம் புலிகேசி” படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த சரித்திர காமெடிப் படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி செம்ம ஹிட் அடித்தது. தற்போது, இப்படத்தின் 2ம் பாகமான “இம்சை அரசன் 24ம் புலிகேசி” படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. 

இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், “ஃபர்ஸ்ட் லுக்” எல்லாம் வெளியானது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், எஸ் பிக்சர்ஸ் சார்பில் சங்கர் தயாரிக்க இருந்தார். 

படப்பிடிப்பின் போதே சிம்பு தேவனுக்கும் வடிவேலுக்கும் இடையில் கதையில் பிரச்சனை வந்ததால் படம் சில நாட்களில் நின்று போனது. இதனால் வடிவேலு படத்தை விட்டும் வெளியேறினார்.

இப்பிரச்சனையைத் தொடர்ந்து வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. வடிவேலு உடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. படத்தில் நடிப்பதற்கு தனக்கு மேலும், ரூ.1 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளாராம். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர், வடிவேலு படத்தை விட்டு விலகியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வடிவேலு தனக்கு ரூ.9 கோடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு அவகாசம் அளித்தது.

மேலும், ஷங்கருக்கு ரூ.9 கோடி வழங்க வேண்டும் இல்லையென்றால், எந்த நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை செய்யத் தவறினால், வடிவேலுக்கு “ரெட் கார்டு” வழங்கப்படும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்ததது.  “ரெட் கார்டு” போட்டால், இந்தப் பிரச்சனை முடியும் வரை வேறு படத்திலும் நடிக்கக் கூடாது என்றும் வடிவேலுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் வடிவேலு தரப்பில் இருந்து தொடர்ந்து எந்த பதிலும் கூறாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்ததால், தற்போது தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு காட்டி ஆப்பு அடித்துள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர்கள் யாரும் இந்த தடை நீங்கும் வரை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

loader