டோலிவுட்டையும் கோலிவுட்டையும் மிரட்டி கொண்டிருக்கும் ஒரு நடிகையின் பெயர் என்று கேட்டால் முதலில் அனைவர் நினைவிற்கும் வருவது ஸ்ரீரெட்டியின் பெயராக தான் இருக்கும். 

திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் என ஆரம்பித்து, ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பல பிரபலங்கள் மீதும் குற்றம் சாட்டி இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. இவரது குற்ற சாட்டுகளுக்கு இவர் இதுவரை எந்த ஆதாரமுக் கொடுத்ததில்லை. அதே சமயம் இவர் யாரை பற்றி எல்லம் குற்றம் சுமத்தினாரோ அது சம்பந்தப்பட்ட நடிகர்கள் இதுவரை ஸ்ரீ ரெட்டி குறித்து எந்த கருத்தும் தெரிவித்ததும் இல்லை. 

இவர் கொடுத்த பட்டியலில் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என பலரின் பெயர் இதுவரை வெளியாகி இருக்கிறது.
 ஸ்ரீரெட்டி இப்படி செய்வது தன்னுடைய தன் மீது உடகங்களின் வெளிச்சத்தை தக்கவைத்து கொள்ள தான் என ஒரு கருத்து நிலவுகிறது. அதன்படி சமீபகாலமாக் உடகங்களில் சென்சேஷனலாக இருந்தவர் ஸ்ரீரெட்டி தான். 

அதன் பலனாக தற்போது ஒரு திரைப்படத்தில் நாயகி ஆக அவர் கமிட் ஆகி இருக்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்க ஸ்ரீரெட்டிக்கு எதிராக கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார், தமிழ் ரசிகர்களுக்கு பிரியமான நடிகை ஒருவர்.


 மேயாதமான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்த சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர் தான் அந்த நடிகை. சமுதாய பிரச்சனைகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கும் நடிகைகளில் பிரியாவும் ஒருவர்.

இவர் நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஸ்ரீரெட்டி எழுப்பி இருக்கும் இந்த புகார் குறித்து கருத்து தெருவித்த போது  "தவறு செய்துவிட்டு அதை இப்படி வெளிப்படையாக கூறுவது சரியல்ல" என தெரிவித்திருக்கிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமை இருக்கிறது என ஸ்ரீரெட்டியை விமர்சித்துள்ளார். அதனை ஏற்றுகொள்வதும், மறுப்பதும் பெண்கள்  கையில் தான் உள்ளது எனவும் கூறி ஸ்ரீரெட்டிக்கு செம நோஸ்கட் கொடுத்திருக்கிறார்.